‘யுனிவர்சிட்டி டீம் எதிர் ஸ்கூல் டீம் மேட்ச் போல தோன்றுகிறது’ என இலங்கை, இந்திய போட்டியை விமர்சித்த ரமீஸ் ராஜா..!
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பிரேமதாச மைதானத்தில் நேற்று நிறைவுக்கு வந்தது .
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் இப்போது இலங்கையில் தவான் தலைமையிலான இரண்டாம்தர அணி இலங்கை தொடரில் பங்கேற்று வருகிறது .
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பலமான ஒரு ஓட்ட எண்ணிக்கையை கடந்த்து. 9 விக்கெட்டுகளை இழந்து 262 இலங்கை அணியால் குவிக்கப்பட்டன.
பதிலளித்து 263 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் ஆரம்ப வீரராக களம் புகுந்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டியே இந்திய அணி 80 பந்துகள் மீதமிருக்க போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது, இந்த போட்டி தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திரம் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய ஆட்டம் ‘யுனிவர்சிட்டி டீம் எதிர் ஸ்கூல் டீம் மேட்ச் போல தோன்றியது என கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.
இந்தியா vs இலங்கை போட்டியைப் பொறுத்தவரையில் ஒரு பல்கலைக்கழக அணி vs பாடசாலை அணி போட்டி போல் தோன்றியது. திறன்கள், செயல்படுத்தல், திறமை மற்றும் விளையாட்டைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் இதுதான்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சவாலான சூழ்நிலை, ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள்.
குறிப்பாக தட்டையான ஓட்டங்கள் குவிக்கவல்ல ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் வெகுவாக தடுமாறியதையும் ரமீஸ் ராஜா தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் விமர்சித்துள்ளார்.
“இலங்கை சுழலுக்கு எதிராக விளையாடிய விதம், சுழற்சியை எவ்வாறு சமாளிப்பது என்பது அவர்களுக்குத் தெரியாது என்பது போல் இருந்தது. வரலாற்று ரீதியாக, இலங்கை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இருப்பினும், தற்போது இன்னும் அந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
“இலங்கை வீரர்கள் ஒரு சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற பிறகு குழப்பமாக இருந்தனர். கியரை எவ்வாறு மாற்றுவது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த குழப்பம் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சு செயல்திறனால் உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.