யூரோ கிண்ணத்தின் தொடர் நாயகனை வளைத்துப் போட்டது பிரபலமான பாரிஸ் St ஜெர்மன் கால்பந்து கழகம் ….!
யூரோ கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி போட்டியில் இத்தாலி அணி கோல் காப்பாளர் Gianluigi Donnarumma உடைய அற்புதமான திறமை மூலமாக பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில் இத்தாலி வெற்றி பெற்றது.
இத்தாலி அணிக்கு யூரோ கிண்ண கிடைப்பதற்கு காரணமாக இருந்த Gianluigi Donnarumma இப்போது பிரபலமான கால்பந்து கழகமான பாரிஸ் st ஜெர்மன் கழகத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
22 வயதான Gianluigi Donnarumma ஏசி மிலான் கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், 50 மில்லியன் யூரோக்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே PSG கழகத்தில் பிரேசிலின் நெய்மர் பிரான்ஸின் கைலியன் மாப்பா அது மாத்திரமல்லாமல் ரியல் மேட்ரிட் கழகத்திலிருந்து அண்மையில் PSG அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட சேர்ஸியோ ரோமஸ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், இத்தாலி கோல் காப்பாளர் Gianluigi Donnarumma PSG கழகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை இனிவரும் நாட்களில் PSG கழகம் காற்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தும் கழகமாக இருக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.