யூரோ கிண்ணத்துடன் இத்தாலி ரோம் நகரை அடைந்தது இத்தாலி- கோலாகல வரவேற்பு..!
கடந்த ஒரு மாதமாக கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்ட மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கிண்ண போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இறுதி போட்டியில் போட்டியை நடத்திய இங்கிலாந்து அணியை தோற்கடித்து இத்தாலி அணி சாம்பியன் மகுடம் சூடியது, இந்த வெற்றிக்கு பின்னர் இத்தாலி கால்பந்து அணி தாயகத்தை சென்றடைந்துள்ளது.
இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் இத்தாலி அணியினருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் மூலமாக இத்தாலி அணி 3-2 என வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.