யூரோ கிண்ணம் இன்று ஆரம்பிக்கிறது- துருக்கி, இத்தாலி முதல் போட்டியில்..! (புகைப்படங்கள் இணைப்பு)

ஐரோப்பாவின் தேசிய கால்பந்து அணிகளுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டிகள் இன்று 11 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்த போட்டிகள் அடுத்த மாதம் 11 ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

24 அணிகள் 12 மைதானங்களில் மொத்தம் 51 போட்டிகளில் விளையாடவுள்ளன. இன்றைய முதல் போட்டியில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் போட்டியிடுகின்றன, இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 க்கு ஆரம்பிக்கவுள்ளது.

குழு விபரம்.

குழு A- இத்தாலி, சுவிஸ்லாந்து, துருக்கி, வேல்ஸ்
குழு B- பெல்ஜியம், ரஷ்யா, டென்மார்க், பின்லாந்து
குழு C- உக்ரைன், நெதர்லாந்து , ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா
குழு D- இங்கிலாந்து, குரேசியா , செக் குடியரசு , ஸ்காட்லாந்து
குழு E- ஸ்பெயின், போலந்து , ஸ்வீடன், ஸ்லோவாகியா
குழு F- ஜெர்மனி , பிரான்ஸ், போர்த்துகள், ஹங்கேரி

நடப்பு சாம்பியனாக போர்த்துக்கல் அணி திகழ்ந்துவரும் நிலையில் இம்முறை எந்த அணி கிண்ணத்தை வெல்லும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு காணப்படுகின்றது.