24 அணிகளுக்கிடையிலான யூரோ கிண்ண கால்பந்து போட்டிகள் நேற்றைய நாளில் ஆரம்பமாகின, இந்த போட்டிகளில் முதல் நாளில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் துருக்கி அணிகள் போட்டியிட்டன.
முன்னாள் உலக சாம்பியன்களான இத்தாலி அணி, துருக்கி அணியை முழுமையாக கட்டுப்படுத்தியதுடன் போட்டியை 3-0 என்று இலகுவாக வெற்றிகொண்டது.
இன்று இடம்பெற்ற முதல் போட்டியில் சுவிஸ்லாந்து மற்றும் வெல்ஸ் அணிகள் போட்டியிட்டன, இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று(12) இரவு 9.30 க்கு பின்லாந்து,டென்மார்க் அணிகளது போட்டியும் நள்ளிரவு 12 .30 க்கு பெல்ஜியம் , ரஸ்யா அணிகளுக்கிடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளது.