யூரோ கிண்ணம் 2020: முதல் சுற்று: நடந்தவை மற்றும் அறிய வேண்டியவை 

யூரோ கிண்ணம் 2020: முதல் சுற்று: நடந்தவை மற்றும் அறிய வேண்டியவை

யூரோ கிண்ணம் 2020 June 11 ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. COVID 19 தொற்று காரணமாக 2020 இல் இருந்து 2021 இற்கு பிற் போடப்பட்ட Euro கிண்ண போட்டிகள் தற்போது குழு நிலை போட்டிகளில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளது.

Euro 2020 ஆரம்பம் – Opening Ceremony

கால்பந்து ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் June 11 துவக்க விழாவுடன் ஆரம்பமானது EURO 2020.

குழு A (Group A)

தொடரின் முதல் நாளில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டியில் குழு A இல் போட்டியிடும் இத்தாலி மற்றும் துருக்கி அணிகள் மோதின.
இப் போட்டியில் Euro 2020 தொடரின் முதல் கோல் ஆக துருக்கி வீரரின் Own Goal பதிவு செய்யப்பட்டது. 2014 உலக கிண்ணத்திலும் முதல் கோல் Own Goal ஆக அமைந்திருந்தது. எனினும் Euro கிண்ண வரலாற்றில் தொடரின் முதல் கோல் Own Goal ஆக அமைவது இது முதல் முறையாகும். இவ்வாறு இப் போட்டியில் இத்தாலி 3-0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தியது.

முதல் சுற்றில் குழு A சார்பில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Wales மற்றும் Switzerland அணிகள் மோதின. இப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையானது.

முதல் சுற்று முடிவில் குழு A இல் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.

குழு B (Group B)

குழு B இல் இடம்பெற்ற முதல் போட்டியில் Denmark மற்றும் Finland அணிகள் மோதின. இப் போட்டியில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது.

முதல் பாதி முடிவை நெருங்குகையில் Denmark அணியின் நட்சத்திர வீரர் Christian Eriksen நிலை குலைந்து மைதானத்தில் வீழ்ந்தார். உடனடியாக போட்டியை நிறுத்திய நடுவர் மருத்துவ அணியை அழைத்தார். பேட்டியின் நடுவே வீரர்கள் மருத்துவ உதவி நாடுவது வழமை தான் என்றாலும் இம்முறை Eriksen இற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உள்ளாக்கியது. எனினும் சக வீரர்கள் மற்றும் நடுவர்களின் உடனடி நடவடிக்கையின் மூலமும் மருத்துவர்களின் உதவியின் மூலமும் Eriksen உடல் நிலை தேறியது.

Eriksen உடல் நிலை சற்று சீராகி அவர் வைத்தியசாலை சென்று வெற்றி கரமாக சிகிச்சை பெறும் வரை போட்டி இடை நிறுத்தப்பட்டிருந்தது. Eriksen நிலை குலைந்து வீழ்ந்த பொது சமயோசிதமாக சிந்தித்து செயற்பட்ட நடுவர் Anthony Taylor மற்றும் Denmark அணி தலைவர் Simon Kjaer மற்றும் சக வீரர்களின் செயல் பலராலும் பாராட்டப்பட்டது. மைதானத்தில் Eriksen ஐ நினைத்து பயத்துடன் கண்ணீர் விட்ட Eriksen இன் மனைவியை Eriksen இன் சக வீரர்கள் ஆறுதல் படுத்தியது அனைவரது கண்களையும் நனைத்திருக்கும். அத்துடன் Eriksen இற்கு மைதானத்தில் வைத்து வழங்கப்பட்ட சிகிச்சையை திரை மறைவில் அளிக்க எதிரணி ரசிகர்கள் Finland கொடியை கொடுத்து உதவி செய்திருந்தனர். இச்செயல் பலரை மனம் நெகிழ வைத்திருந்தது.

அத்துடன் Eriksen இன் உடல் நிலை தேறியதை உறுதி செய்த பின் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் Finland இரண்டாம் பாதியில் கோல் அடித்திருந்தாலும் Finland அணி வீரர்கள் கோல் ஐ கொண்டாட மறுத்து கனவான் தன்மையுடன் நடந்து கொண்டு பலராலும் பாரட்டப்பட்டனர். அது மட்டுமல்லாமல் போட்டியின் ஆட்ட நாயகனாக Eriksen ஐ தேர்வு செய்து UEFA பெருமை சேர்த்தது. போட்டியில் Denmark அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

 

குழு B இல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெல்ஜியம் மற்றும் ரஷ்ய அணிகள மோதின. இப் போட்டியில் Belgium 3-0 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றி பெற்றது. இப் போட்டியில் Eriksen இன் Inter Milan சக வீரர் Lukaku கோல் அடித்து அக் கோல் ஐ Eriksen இற்கு சமர்ப்பித்தார். Lukaku இப் போட்டியில் இரு கோல்கள் அடித்திருந்தார்.


குழு C (Group C

குழு C இல் முதல் போட்டியில் Austria முதன் முதலில் Euro கிண்ணத்தில் தடம் பதிக்கும் North Macedonia அணியை எதிர் கொண்டது. போட்டியில் Austria 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் North Macedonia சார்பில் Pandev கோல் அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார். 37 வயதான Pandev North Macedonia சார்பில் Euro கிண்ணத்தில் கோல் அடித்த முதல் வீரராவார்.

குழு C இல் இடம்பெற்ற மற்றைய போட்டியில் Netherlands மற்றும் Ukraine அணிகள் மோதின. இப் போட்டியில் Netherlands இரு கோல்கள் அடித்து முன்னிலை இல் இருந்தாலும் Ukraine இறுதி நேரத்தில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து சமநிலைப்படுத்தியது. எனினும் அதன் பின்னர் மீண்டும் Netherlands. ஒரு கோல் அடித்து போட்டியை. 3-2 என வெற்றி கொண்டது.

குழு C இல் Austria மற்றும் Netherlands 3 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

குழு D (Group D)

குழு D இன் முதல் போட்டியிலேயே பலம் பொருந்திய England மற்றும் Croatia அணிகள் மோதின. இப் போட்டியில் England அணி 1-0 என்ற கோல் கணக்கில் Croatia வை வீழ்த்தி முக்கிய 3 புள்ளிகளை பெற்று கொண்டது.

குழு D இன் மற்றைய போட்டியில் Scotland அணியை எதிர் கொண்ட செக்குடியரசு Patrick Schick இன் இரு கோல் உதவியுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இப் போட்டியில் Patrick Schick மைதானத்தின் மத்தியில் இருந்து கோல் அடித்து Goal of the Tournament பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

குழு E (Group E)

குழு E இன் முதல் போட்டியில் Lewandowski இன் Poland அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது Slovakia. கோல் காப்பாளர் இன் Own Goal உடன் ஆரம்பித்த Poland இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் போட்டியை சமப்படுத்தி இருந்தாலும் பின்னர் ஒரு வீரர் Red Card பெற்று 10 வீரர்களாக குறைக்கப்பட்டு Slovakia விடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. Euro 2020 இன் முதலாவது Rrd Card ஐ பெற்றார் Poland வீரர் Krychowiak.

இப்போட்டியில் போலந்து கோல் காப்பாளர் Szczesny Own கோல் அடித்து வித்தியாசமான ஒரு தரவை தொடர்கின்றார்.
யூரோ கிண்ண போட்டிகளில் போலந்து இன் முதல் போட்டியில் இவரது ஆட்டம் சம்மந்தமான தரவு.

Euro 2012: Sent off

Euro 2016: Injured

Euro 2020: Own Goal

குழு E இன் மற்றைய போட்டியில் Spain Sweden அணிகள் மோதின. ஆட்டத்தில் பெரும் பகுதி நேரத்தில் பந்தை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த Spain பல முறை முயன்றும் Goal ஏதும் அடிக்க முடியாமல் போக ஆட்டம் கோல்கம் ஏதும் இல்லாத நிலையில் சமநிலையானது.

 

 

ஸ்பெயின் இன் பெட்ரி இப் போட்டியில் பங்கு பற்றியதன் மூலம் ஸ்பெயின் சார்பாக யூரோ கிண்ணத்தில் பங்குபற்றிய இளம் வீரர் ஆனார். (18 Years 201 Days)

முதல் சுற்று முடிவில் குழு E இல் Slovakia முதல் இடத்திலும் Spain மற்றும் Poland இறுதி இரு இடங்களிலும் உள்ளன.

குழு F (Group F)

Group of Death என்று அழைக்கப்படுகிற குழு F இன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் Portugal மற்றும் Hungary அணிகள் மோதின. இப் போட்டி 68 000 ரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. அத்துடன் இப் போட்டியில் ஆடியதன் மூலம் 2004 2008 2012 2016 2020 என 5 Euro கிண்ண போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார் Cristiano Ronaldo.

இப் போட்டியில் Hungary சிறப்பாக செயல்பட்டாலும் இறுதி 10 நிமிடங்களில் Portugal அடுத்தடுத்து கோல் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப் போட்டியில் Cristiano Ronaldo இரு கோல்கள் அடித்து Euro கிண்ண வரலாற்றில் அதி கூடிய கோல்கள்(11) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

குழு F இன் இரண்டாவது போட்டியில் முதல் சுற்றின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான France மற்றும் Germany அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது. பலம் பொருந்திய இரு அணிகளும் Group of Death இல் இருந்து அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெறுவதற்கு போராடின. போட்டியின் பெரும்பான்மை நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய போதும் Hummels இன் Own Goal மூலம் France முன்னிலை பெற்றது. தொடர்ந்து மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில் போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் France கைப்பற்றியது.

அதேநேரம் Group of Death புள்ளி பட்டியலில் Portugal மற்றும் France 3 புள்ளிகளை பெற்று முதல் இரு இடங்களில் உள்ளன.

முதல் சுற்றை பொறுத்தவரை

  • Patrick Schick, Romelu Lukaku மற்றும் Cristiano Ronaldo ஆகியோர் இரு கோல்கள் அடித்து Golden Boot இற்கான பட்டியிலில் முதல் இடத்தில் உள்ளனர்.
  • இதுவரை 3 Own கோல்கள் பதிவாகியுள்ளன.
  • ஒரு வீரர் Red Card பெற்று வெளியேறியுள்ளார்.