யூரோ கிண்ண கால்பந்து- உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது பிரான்ஸ் ..!

ஜேர்மனி பரிதாபத் தோல்வி -யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று நள்ளிரவு பலம் பொருந்திய இரண்டு அஅணிகளாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இறுதி வரைக்கும் ஒரு போராட்டமாக இருந்தது.

 

நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் அணி, முன்னாள் உலக சாம்பியனான ஜேர்மனியை எதிர்த்து விளையாடியது, இறுதி வரைக்கும் இரண்டு அணி வீரர்களும் மூர்க்கத்தனமாக முட்டி மோதினாலும் கோல் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும்கூட கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தடுமாறினர்.

ஜேர்மனி வீரர் கவனயீனமாக அடித்த Own Goal மூலமாக பிரான்ஸ் அணி போட்டியில் 1-0 என்று வெற்றி பெற்று அசத்தியது.