யோக்கர் பந்தை எப்படி எதிர்கொள்வது- பொலார்ட் கற்றுத்தந்த பாடத்தை பாருங்கள்..! (வீடியோ இணைப்பு)

ஜோக்கர் பந்தை எப்படி எதிர்கொள்வது- பொலார்ட் கற்றுத்தந்த பாடத்தை பாருங்கள்..! (வீடியோ இணைப்பு)

 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 34வது ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 155 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக் கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் மிக அற்புதமான பங்களிப்பை வழங்கினர், இந்த போட்டியில் ரென்ட் போல்ட் வீசிய முதலாவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பி அதிரடியை ஆரம்பித்து வைத்தார் கில்.

முதல் ஓவரில் 15 ஓட்டங்கள் பெறப்பட்டன அடுத்து அடம் மில்ன் வீசிய ஓவரிலும் 15 ஓட்டங்கள் பெறப்பட்டன, மூன்றாவது ஓவரை பும்ரா வீசியபோது அந்த ஓவரில் 10 ஓட்டங்கள் பெறப்பட்டன, ஆக மொத்தத்தில் முதல் 3 ஓவர்களில் 40 ஓட்டங்களை கொல்கத்தா அதிரடியாக பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர்  வந்த ஓவர்களிலும் பந்துகள் நாலாபுறமும் தெறிக்க பவர் பிளேயின் 6 ஓவர்களில் மொத்தம் 65 ஓட்டங்களை கொல்கத்தா பெற்றது, கில் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அதன் பின்னர் ஆடுகளம் புகுத்த ராகுல் திரிபாதி ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த ஐபிஎல் பருவ காலத்தில் கொல்கத்தாவின் புதிய கண்டுபிடிப்பாக புகழப்படும் வெங்கடேஷ் ஐயர் 25 பந்துகளில் அரைச்சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக இந்த போட்டியில் மிக இலகுவாக 31 பந்துகளில் மீதமிருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

<iframe loading=”lazy” src=”https://www.iplt20.com/video/239634/nutmegged-pollard-s-innovative-leave” width=”800″ height=”550″ frameborder=”0″ scrolling=”no”></iframe>

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் இந்த இரண்டாம் கட்ட போட்டிகளில் இரு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய நிலையில், கொல்கத்தா இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டு ஆட்டக்காரர்களுக்கிடையில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

அன்று ரசல் வீசிய யோக்கர் பந்தை பொல்லாரட் எதிர்கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. கிரிக்கெட்டில் யோக்கர் பந்தை இப்படியும் எதிர் கொள்ளலாமா எனும் வித்தையை நம் எல்லோருக்கும் பொல்லார்ட் கற்றுத் தந்திருக்கிறார்.

வீடியோவை பாருங்கள் எல்லாம் புரியும்.

https://www.iplt20.com/video/239634/nutmegged-pollard-s-innovative-leave

https://www.iplt20.com/video/239634/nutmegged-pollard-s-innovative-leave?tagNames=indian-premier-league,ipl-magic

 

https://m.youtube.com/watch?v=XgLW3FsGDX8&feature=youtu.be