ரத்னம் அணியை வெற்றிகொண்டது டிபெண்டெர்ஸ் அணி…!
இலங்கையில் இடம்பெற்றுவரும் கழக மட்ட கால்பந்து போட்டியில் ரத்னம் மற்றும் டிபெண்டெர்ஸ்அணிகளுக்கிடையிலான போட்டியில் டிபெண்டெர்ஸ் அணி 3-1 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.
டிபெண்டெர்ஸ் FC அணி சார்பில் H.D. மதுஷன் டீ சில்வா , டங் ஸ்டீபன் ,Y.M. லக்ஷிதா ஜெயதுங்க ஆகியோர் கோல்களை பதிவு செய்தனர்.
ரத்னம் அணி சார்பில் – V.R.S.J. எடிசன் பைலுர்டோ 25 நிமிடத்தில் தன் அணிக்கான கோலைப் பதிவு செய்தார்.போட்டியில் இரு தடவைகள் தவறு செய்த காரணத்தால் M.J. ரிஃகான் மொஹமட் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.