ரபேல் நடால் விலகல்.

ஸ்பெயினின் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான ரபேல் நடால், ATP டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடாலின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடால் இதனை அறிவித்துள்ளார்.

பின் முதுகு பக்கத்தில் வலி ஏற்பட்டதன் காரணமாக தான் குறித்த போட்டியிலிருந்து விலகியதாக நடால் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/RafaelNadal/status/1356480493458386944

உலக டென்னிஸ் தரநிலையில் 2 ம் நிலையில் காண்டப்படும் 34 வயதான ஸ்பெயினின் நடால்,ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை மெல்போர்ன் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை போட்டியில் எதிர்கொள்ளவிருந்த நிலையிலேயே வலி காரணமாக விலகினார்.

எனினும் ஸ்பெயின் எதிர்வரும் வியாழக்கிழமை கிரீஸ் அணியை சந்திக்கவுள்ள போட்டிக்கு தான் தயாராக இருப்பேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு இடம்பெற்ற ATP கிண்ண போட்டிகளில் ஸ்பெயின் , சேர்பியாவிடம் தோற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், ஆஸ்திரேலியன் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வலியால் அவதிப்படுகின்றமை ரசிகர்களுக்கு கவலையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.