ரவி சாஸ்திரி இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளரா- புள்ளிவிபரம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெற்றிகரமான பயிற்சியாளரா அல்லது அவரை நீக்கிவிட்டு இன்னுமொருவரை கொண்டுவர வேண்டுமா எனும் வாதப்பிரதி வாதங்கள் இல்லாமல் இல்லை.

இந்திய டெஸ்ட் அணி ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ள நிலையில், ரவி சாஸ்திரி வெற்றிகரமான இந்திய பயிற்சியாளர் என்பதனை நிரூபித்துள்ளார் எனலாம்.

சாஸ்திரி பயிற்றுவிப்பில் 46 டெஸ்ட் போட்டிகளில் 28 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. வெற்றி சராசரி 60.87% ஆக காணப்படுகின்றது.

ஜான் ரைட் பயிற்றுவிப்பில் 52 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளை பெற்றுள்ளது. கேரி கேர்ஸ்டன் பயிற்றுவிப்பில் 52 டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது .

அதேநேரம் டங்கன் பிளெட்சர் பயிற்றுவிப்பில் 39 டெஸ்ட் போட்டிகளில் 13 வெற்றிகளை பெற்றுள்ளது , அடுத்ததாக கும்ப்ளே பயிற்றுவிப்பில் பயிற்றுவிப்பில் 17 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகளை பெற்றுள்ளது.

ஆகவே இப்போதைய நிலையில் இந்தியாவுக்கு பயிற்சியாளராக சாஸ்திரி அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளமை சிறப்பம்சமாகும்.