ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியில் நால்வருக்கு கொரோனா..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
4வது போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்றைய நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பித்துள்ளது .
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததற்கு பின்னர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட நால்வர் கொரோனா சோதனையில் சிக்கி தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர் , இவர்களோடு பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் நால்வரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்திய வீரர்கள் எவருக்கும் இது வரைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டதக்கது.