ரவி சாஸ்திரி எதிர்வு கூறும் இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டனாக வரக்கூடிய 3 வீரர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-15 இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு “திடமான” எதிர்கால கேப்டனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பு என்று முன்னாள் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

ரிஷப் பந்த் முதல் ஷ்ரேயாஸ் ஐயர் வரை, வரவிருக்கும் போட்டிகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களை வெளிக்கொணர்வதாக இருக்கலாம்.

தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “சிறப்பான” வேலையைச் செய்கிறார் என்று சாஸ்த்ரி கூறினார்.

“விராட் இனி கேப்டனாக இல்லை, ஆனால் ரோஹித்தும் குறிப்பாக வெள்ளை பந்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அணிக்கு (எதிர்காலத்தில்) யார் கேப்டனாக இருப்பார்கள் என்று இந்தியா பார்க்கிறது — ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் உள்ளனர்.

ஐபிஎல் 2022 இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​”இந்தியா எதிர்காலத்திற்கான உறுதியான கேப்டனைத் தேடும், இங்கே வாய்ப்பு உள்ளது” என்று சாஸ்திரி அதன்போது கூறினார்.