ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் இந்திய கிரிக்கட் சபை -கடுமையான கோபத்தில் ..!

ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் இந்திய கிரிக்கட் சபை -கடுமையான கோபத்தில் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, நேற்று நிறைவுற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தனதாக்கியது.

இந்த நிலையில் 4வது போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பயிற்சியாளர் சாஸ்த்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Bio Bubble எனப்படும் உயிர்க்குமிழி முறையை மீறி எப்படி தொற்று ஏற்பட்டது என விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்றப பொது நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் கலந்து கொண்டதை இந்திய கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் சபையின் அனுமதி பெறப்படாமல், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தெரியபடுத்தப்படாமல் இந்த நிகழ்வில் இவர்கள் கலந்து கொண்டதாக அறியவருகிறது.

இதனாலேயே தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது, இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்த நிலையில் இது தொடர்பில் சாஸ்திரியிடமும்,கோலியிடமும் விளக்கம் கோரப்படும் என இந்திய கிரிக்கெட் சபை ஆதாரம் காட்டி ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.