ரஷீத் கான் தலைவராக நியமனம்…!

ரஷீத் கான் தலைவராக நியமனம்…!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஷீத் கான் அந்த அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீச்சு தரவரிசையில் 2 ம் இடத்தில் காணப்படும் ரஷீத் கான், அவரது சிறந்த ஆளுமை மூலமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுச் சேர்ப்பார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பார்ஹான் யூசுப்சாய் தெரிவித்தார்.

அதேநேரம் அணியின் உதவி தலைவராக நஜிபுல்லா ஷர்தான் நியமனம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து, இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுடன் குழு B யில் ஆப்கானிஸ்தான் அணி உலக கிண்ண T20 போட்டிகளுக்கான குழுவில் இடம்பெற்றுள்ளது.

ஹஹ்மதுல்லாஹ் ஷாஹிடி ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் முக்கியமானது.

IPL போட்டிகளில் பிரபலமான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத்தை அணியின் முக்கிய வீரராகவும் ரஷீத் கான் திகழ்கின்றமை முக்கியமானது.