ரஹானேயின் இடத்திற்கு பொருத்தமான 3 இந்திய வீரர்கள்- இயன் சாப்பல் பரிந்துரை..!

ரஹானேயின் இடத்திற்கு பொருத்தமான 3 இந்திய வீரர்கள்- இயன் சாப்பல் பரிந்துரை..!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி தலைவராக இருக்கும் அஜிங்கியா ரஹானே அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் மிகப்பெரும் அளவிலே தடுமாறி வருகின்றார்.

இந்த ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 372 ஓட்டங்களை குவித்துள்ளார், சராசரி 20 க்கும் குறைவாகவே இருக்கிறது, 19.57 எனும் சராசரியைக் கொண்டிருப்பதால் அவரை நீக்கிவிட்டு, அந்த உதவி தலைவர் பதவிக்கு ரோகித் சர்மா பொருத்தமானவர் எனவும் தெரிவித்தார்.

ரஹானேவின் ஐந்தாமிடத்தில் துடுப்பெடுத்தாட ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பான்ட் ஆகிய மூவரில் ஒருவர் பொருத்தமானவராக இருப்பார் எனவும் இயன் சாப்பல் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து இன்னும் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் அந்த இடத்தில் துடுப்பாடினால் இந்தியாவுக்கு அது இன்னும் சாதகமாக இருக்கும் எனவும் சப்பெல் கருத்து தெரிவித்தார்.