ராகுலின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு- வீடியோ இணைப்பு..!

ராகுலின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு- வீடியோ இணைப்பு..!

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது, 27 ஓட்டங்களால் பின்நிலையிலிருந்த இந்திய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 229 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

ஒரு கட்டத்தில் 100 ஓட்டங்களுக்குள் ஒரு விக்கெட் எனும் வலுவான நிலையில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிவதற்கு காரணமானவர் ஷர்துல் தாகூர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு இந்த போட்டியில் நம்பிக்கை கொடுத்தார்.

2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் மிகச் சிறப்பாகத் ஆடிக்கொண்டிருந்த போது ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரரிடம் பிடிகொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார், இந்த ஆட்டமிழப்பு சந்தேகமாக இருந்தது, மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை கேட்டும் மூன்றாவது நடுவரும் தவறான முடிவையே எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து தரையில் பட்டு பந்து கைகளுக்குள் செல்வது அழகாக தெரிந்தும்கூட நடுவர் அதனை ஆட்டமிழப்பாகவே அறிவித்தார், ஏற்கனவே தென்னாபிரிக்க வீரர் வன்டேர் டுசனது ஆட்டமிழப்பும் சர்சையை உருவாக்கியது.பந்து அழகாக தரையில் பட்டு ரிசாப் பான்ட் பிடி எடுத்ததையும் தவறாக ஆட்டமிழப்பாகவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்து வெளியே செல்கின்ற போது தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் லோகேஷ் ராகுல் வாய்தர்கத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது .

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.

வீடியோ இணைப்பு.