ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்காக இலங்கை ஆல்ரவுண்டர் திசர பெரேராவை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெரேராவின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
32 வயதான திசர பெரேரா ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியில் தனது படத்தை பகிர்ந்து கொண்டார் , அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸின் அதிகாரப்பூர்வ கணக்கையும் அவர் அங்கே குறித்துள்ளார்.
தகவல்களின்படி, ராஜஸ்தான் ராயல்ஸில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக பெரேரா இணைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கிறது..
ஏற்கனவே இலங்கை அணியில் இருந்து வணிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் விராட் கோலி தலைமையிலான RCB அணியில் இந்த வாரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து இப்போது இன்னுமொரு இலங்கையரான திசர பெரேரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பருவவத்தில் இசுரு உதான மட்டுமே இலங்கை சார்பில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரராக திகழ்ந்தார்.
இம்முறை ஐபிஎல் இல் இலங்கையிலிருந்து மூன்று வீரர்கள் IPL அணிகளில் விளையாடும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
திஸர பெரேராவுக்கு வாழ்த்துக்கள், மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்காக காத்திருக்கலாம்.
9.20 PM