ரிச்சாலிஸன் ஹாட்ரிக் கோல் அடிக்க ஜெர்மனியை பந்தாடியது பிரேசில் ..!

ரிச்சாலிஸன் ஹாட்ரிக் கோல் அடிக்க ஜெர்மனியை பந்தாடியது பிரேசில் ..!

ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு அங்கமான கால்பந்தாட்ட போட்டிகளில் மிக முக்கியமான ஜெர்மனி மற்றும் பிரேசில் அணிகள் இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பிரீமியர் கால்பந்தாட்ட போட்டிகளில் Everton அணிக்காக விளையாடிவரும் ரிச்சாலிசன் வெறுமனே 30 நிமிடங்களிலேயே 3 கோல்கள் அடித்து பிரேசில் அணியின் வெற்றியை உறுதி படுத்தினார்.

ஜெர்மனி அணியின் வீரர்கள் கோல் பெறுவதற்கான முனைப்புக்களை ஏராளம் ஏற்படுத்தினாலும் கூட, பிரேசில் அணி அதனை லாவகமாக தடுத்து நிறுத்தியது.

இறுதியில் 4_2 எனும் அடிப்படையில் பிரேசில் அணி ஜெர்மனியை ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் வெற்றி கொண்டு அசத்தியது.

இந்த போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த ரிச்சாலிசன், பிரீமியர் லீக  கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வரிசையில் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் தனதாக்கி உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.