ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பதவியை துறந்தார் ஜினடின் சிடேன்- என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா …!

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் கழகத்தின் பயிற்சியாளராகவும் திகழ்ந்த 48 வயதான ஜினடின் சிடேன், அந்த பதவியிலிருந்து விடைபெற்றிருக்கின்றார்.

ஏற்கனவே முன்னரும் பயிற்சியாளராக திகழ்ந்த ஜினடின் சிடேன், கடந்த 2018 மே மாதம் தனது பதவியை துறந்தாலும் மீண்டும் 10 மாதங்கள் கடந்த நிலையில் 2 வது தடவையாக ரியல் மாட்ரிட் கழகத்தின் பயிற்சியாளர் பதவியை ஏற்றிருந்தார். அந்த சீசனில் அணி சாம்பியன் மகுடம் சூடிக் கொண்டது. ஆனால் இம்முறை அவர்களால் எதுவித சாம்பியன் மகுடங்களையும் சூடமுடியவில்லை.

இந்தநிலையிலேயே இந்த பருவகாலத்தில் ரியல் மாட்ரிட் எதுவித கிண்ணங்களையும் கைப்பற்ற தவறிய காரணத்தால், பதவி துறப்பதாக அறிவித்திருக்கிறார் ஜினடின் சிடேன்.

2001 – 2006 காலப்பகுதியில் ரியல் மாட்ரிட் கழகத்தின் முக்கிய வீரராக விளையாடிய ஜினடின் சிடேன், 3 சாம்பியன்ஸ் லீக் மகுடங்களை அணிக்கு வெற்றிகொண்டு கொடுத்திருந்தார் .அத்தோடு 2016 – 2018 பருவகாலத்தில் இவர் பயிற்சியாளர் பதவி வகித்தபோது லா லிகா கிண்ணத்தை அணிக்கு பெற்றுக் கொடுத்திருந்தார்.

ஆனால் இம்முறை தனது அணியால் எதுவித கிண்ணங்களையும் கைப்பற்ற முடியாத நிலையிலேயே, தான் பதவி விலகுவதாக ஜினடின் சிடேன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லா லிகா போட்டிகளில் 2 வது இடத்தையும், சாம்பியன் லீக் தொடரின் அரை இறுதியிலும் தோல்விகளை தழுவிய ரியல் மாட்ரிட், கடந்த 11 ஆண்டுகளில் கிண்ணங்கள் எதுவும் வெற்றிகொள்ளாதா கால்பந்து சீசனாக நிறைவுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.