ரியான் பராக் மற்றும் ஹர்ஷல் படேல் மைதானத்தில் வாக்குவாதம் – சிக்சர் அடிச்சா சண்டைக்கா போவிங்க ஹர்ஷால் ? ( விடியோ இணைப்பு )
இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இன்னிங்ஸுக்குப் பிறகு, ரியான் பராக் மற்றும் ஹர்ஷல் படேல் 20 வது ஓவருக்குப் பிறகு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஹர்ஷல் வீசினார், அதில் பராக் இரண்டு சிக்ஸர்களை அடித்தார், அதில் ஒன்று கடைசி பந்தில் வந்தது.
இதன்பின்னரே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
This was after 2 sixes were hit off the last over pic.twitter.com/qw3nBOv86A
— ChaiBiscuit (@Biscuit8Chai) April 26, 2022
புனேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஜோஷ் ஹேசில்வுட் (2/19), வனிந்து ஹசரங்க டி சில்வா (2/23), மொஹமட் சிராஜ் (2/30) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை திணறடித்தனர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.