ரிஷப் பாண்டை பின்தள்ளி தரவரிசையில் முன்னகர்ந்த பாபர் அசாம்..!

ரிஷப் பாண்டை பின்தள்ளி தரவரிசையில் முன்னகர்ந்த பாபர் அசாம்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இந்த தர வரிசையின் அடிப்படையில் வில்லியம்சன் முதல் இடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் காணப்படும் நிலையில் நான்காவது இடத்தில் லபுச்சேன் காணப்படுகின்றார்.

5 ஆவது இடத்தில் விராட் கோலி உள்ளமை குறிப்பிடத்தக்கது, இந்த புதிய தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பான்டை பின்தள்ளிவிட்டு பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னோக்கி நகர்ந்து 7வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இது மாத்திரமல்லாமல் 124 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற பாவாட் அலாம் 36 இடங்களில் முன்னோக்கி வந்து 21 இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அஃப்ரிடி 10 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தை பிடித்துள்ளார்.

ICC யின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட தரவரிசை இணைப்பு ??

ICC யின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசை இணைப்பு ??