ரிஷாப் பான்டை ஆரம்ப வீரராக்கிய ரோகித் சர்மா- புதுவித விளக்கம், கொண்டாடித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

ரிஷாப் பான்டை ஆரம்ப வீரராக்கிய ரோகித் சர்மா- புதுவித விளக்கம், கொண்டாடித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில்  நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2_0 என வெற்றி கொண்டது.

இந்த போட்டியில் எல்லோரும் எதிர்பாராதவிதமாக ரிஷாப் பான்ட் ஆரம்ப வீரராக ஆடுகளம் அனுப்பப்பட்டார் ,இது தொடர்பில் ரோகித் சர்மா தன்னுடைய தெளிவான கருத்தை பதிவுசெய்தார் .

“நான் வெவ்வேறு விஷயங்களைச் செய்யும்படி கேட்கப்பட்டேன், எனவே இது அதில் ஒரு வேறுபட்ட விடயம்தான். ரிஷப் ஆரம்ப வீர்ரானதைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் அது நிரந்தரமானது அல்ல.

அடுத்த ஆட்டத்தில் ஷிகர் தவானை திரும்பப் பெறுவோம், அவருக்கு சிறிது நேரம் தேவை. இது எப்போதைக்குமான முடிவுகள் அல்ல.

நீண்ட கால நோக்கத்துடன் சில விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறோம், எனவே இந்த செயல்பாட்டில் ஆட்டத்தை இழந்தால் நாங்கள் கவலைப்பட மாட்டோம், ”என்று போட்டிக்கு பிந்தைய ஊடக சந்திப்பில் ரோஹித் வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் அதிகமானவர்கள் இந்த நகர்வு குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.