ரிஷாப் பான்ட் செய்யும் தவறு என்ன தெரியுமா ?

செளத் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் K.L.ராகுலின் அணித்தேர்வும், ஆன்-பீல்ட் கேப்டன்சியும் சர்வதேச அணிக்கானதாய் இல்லை. அதற்கு முன்பு அதே தொடரில் விராட்கோலி விளையாடாத டெஸ்டிலும்.

அடுத்து IPLல் பஞ்சாப் அணிக்கான கேப்டன்சி மற்றும் L.S.G அணிக்கான முதல் போட்டியின் கேப்டன்சியும் அப்படியே. தொடர்ச்சியாய் சரியில்லாத கேப்டன்சியால் K.L.ராகுலை கொஞ்சம் கடுமையாகவே விமர்சிக்கவும் செய்திருந்தேன். (பின்பு யோசித்த பொழுது clown என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தவறு என்று உணர்ந்து, வருத்தப் பதிவும் பதிவிட்டிருந்தேன்).

ஆனால் அதே K.L.ராகுல் இந்த IPLல் L.S.G அணியின் இரண்டாவது போட்டியிலிருந்து, கேப்டன்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வருகிறார். அவர் தானாய் உணர்ந்தாரோ இல்லை அணி நிர்வாகத்தாலோ இல்லை கம்பீராலோ மாற்றம் தெரிகிறது. இதுதான் முக்கியம்.

அதேவேளையில் ரிஷாப் பண்ட் அதிக தவறுகள் செய்வதில்லை ஒருசில தவறுகள்தான் செய்கிறார். ஆனால் அதை உணர்ந்து திருத்திக்கொள்கிறாரா என்றால் இல்லவே இல்லை.

அவர் என்ன செய்கிறார் என்றால் குறைந்தது ஒரு ஆட்டம் விட்டு ஒரு ஆட்டமாவது செய்த தவறையே மீண்டும் செய்கிறார்.

இதுதான் இவர் பெரிய விமர்சன வட்டத்திற்குள் வராமல் இருந்ததிற்கு காரணம். ராகுல் தொடர்ந்து கேப்டன்சியில் தவறுகள் செய்ததினால்தான் விமர்சனத்துக்கு உள்ளானார்.

ரிஷாப் கேப்டன்சியில் மட்டுமல்ல பேட்டிங் அணுகுமுறையிலும் தவறுகளை உணர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டும்!

Richards

YouTube Link ?

YouTube link ?