அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் நாட்டின் நிலைமை குறித்து துயரமடைகிறேன்; ரொசான் மகநாம.!
எமது திறமையற்ற அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் இருக்கும் எனது நாட்டின் நிலையை கண்டு துயரமடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொசான் மகநாம தெரிவித்துள்ளார்
அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது
எமது திறமையற்ற அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் இருக்கும் எனது நாட்டின் நிலையை கண்டு துயரமும் காயமும் அடைந்துள்ளதால் கனத்த இதயத்துடன் இந்த பதிவை எழுதுகின்றேன்.
நான் எனது நாட்டை நேசிக்கின்றேன் இந்த தலைவர்கள் எனப்படுபவர்களை விட அதிகளவு தேசப்பற்றுள்ளவன் என்பதை நான் தெரிவிக்கவேண்டும்.
சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும் நான் எனது நாட்டை விட்டு வெளியேறவில்லை.
இந்த தருணத்தில் உங்கள் அனைவiரையும் இனமொழி மத அரசியல் கட்சி- நம்பிக்கைகள் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றுபடுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.