ரொனால்டோவின் வரவால் கோல்மழை பொழிந்தது மன்செஸ்டர் யுனைட்டட்..!
பிரபலமான கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தோடு இணைந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டிகள் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியை பொறுத்தவரையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் மிக முக்கியமான போட்டியாக மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் Newscastle அணிகள் மோதிய போட்டி பார்க்கப்பட்டது .
கிறிஸ்டியானோ ரொனால்டோ 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய தாய் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தோடு இணைந்து கொண்ட பின்னர் ரொனால்டோ விளையாடிய முதல் போட்டியாக இந்த போட்டி இருந்தது.
இந்த போட்டியில் தன்னுடைய வரவை ஆழமாகப் பதித்திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று 2 கோல்களை பெற்றுக்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
45 ‘ரொனால்டோ
62 ‘ரொனால்டோ
80 ‘பி. பெர்னாண்டஸ் ⚽
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் புருனோ பெர்னாண்டஸ் போர்ச்சுகல் அணிக்காக ஒரே ஆட்டத்தில் இரண்டு முறை மட்டுமே கோல் அடித்துள்ளனர்.
ஆனால் இன்று ரொனால்டோவின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடட்டுக்காக இருவரும் ஸ்கோர்ஷீட்டில் தங்கள் பெயரை பதிந்தனர்.
போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் 4-1 எனும் அடிப்படையில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.