ரொனால்டோ பாணியில் தாய் வீட்டுக்கு கிளம்பினார் இன்னுமொரு பார்சிலோனா நட்சத்திரம் ..! – தொடரும் சிக்கல்..!

ரொனால்டோ பாணியில் தாய் வீட்டுக்கு கிளம்பினார் இன்னுமொரு பார்சிலோனா நட்சத்திரம் ..! – தொடரும் சிக்கல்..!

கால்பந்து பரிமாற்று நடவடிக்கைகளுள் மிக முக்கியமான ஒரு பரிமாற்று நடவடிக்கையாக பார்சிலோனாவின் முன்னணி வீரரான பிரான்சின் அன்ரோனியோ கிரீஸ்மன் தன்னுடைய தாய் வீடான அட்லெட்டிகோ மாட்ரிட் கழகத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

2022 ஜூன் மாதம் வரைக்கும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

40 மில்லியன் யூரோ ஒப்பந்த தொகைக்கு இவர் பரிமாற்று ஒப்பந்தங்களின் மூலம் அட்லெட்டிகோ மாட்ரிட் கழகத்திற்கு மாற்றலாகி இருக்கிறார்.

பார்சிலோனா கழகத்தில் மெஸ்ஸியுடன் சேர்ந்து கலக்கிய கிரீஸ்மன் விடை பெறுவது பார்சிலோனா கழகத்துக்கு இன்னும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 வயதான ராயல் எமர்சனை பார்சிலோனா கழகத்தில் இருந்து Tottenham கழகம் ஒப்பந்தம் செய்திருக்கும் அதேதினத்தில் கிரீஸ்மனும் பார்சிலோனாவுக்கு விடைகொடுத்துள்ளார்.

 கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்செஸ்டர் யுனைட்டட் எனும் தன்னுடைய தாய் கழகத்துக்கு மீண்டும் சென்றதைப் போன்று ,இப்போது கிரீஸ்மனும் தன்னுடைய தாய் கழகமான அட்லெடிகோ மாட்ரிட் கழகத்தை மீண்டும் சென்றடைந்திருக்கிறார்.