ரொனால்டோ ரசிகர்களுக்கு கவலையான செய்தி -இரட்டையரில் ஒருவர் உயிர் பிரிந்ததாக அதிர்ச்சித் தகவல் …!

ரொனால்டோ ரசிகர்களுக்கு கவலையான செய்தி -இரட்டையரில் ஒருவர் உயிர் பிரிந்ததாக அதிர்ச்சித் தகவல் …!

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைவரும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் மன்சஸ்டர் யுனைட்டட் கழகத்தின் நட்சத்திர வீரராக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது.

அவருக்கு கிடைத்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு ஆண்குழந்தை மரணத்தை தழுவிக் கொண்டு இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்திருக்கிறார்.

“எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்க வேண்டும்” என்று ரொனால்டோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “எந்த பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.

“எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எங்களுக்கு பலத்தை அளிக்கிறது. அனைத்து கவனிப்புக்கும் ஆதரவிற்கும் டாக்டர்கள் மற்றும் தாதியர்களுக்கு நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்’ என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.

ஆன்ம ஈடேற்றத்துக்காக பிரிர்த்திப்போம். ?