ரோகித் சர்மாவை பதவி நீக்கக் கோரிய விராட் கோலி- வெடித்திருக்கும் புதிய சர்ச்சை, பதவி விலகியதன் மர்மம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி நேற்றைய நாளில் டுவென்டி20 போட்டிகளில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார்.
எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்குப் பின்னர் விராட் கோலி இந்தியாவின் டுவென்டி-20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் சபையிடம் இருந்து கசியும் தகவல்களின் அடிப்படையில், விராட் கோலி, ரோகித் சர்மாவை உதவி தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்கு லோகேஷ் ராகுலும் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் ரிஷாப் பான்டையும் உதவித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
32 வயதான கோலி ,34 ரோகித் சர்மா தொடர்ந்தும் தனக்கு உதவி தலைவராக செயல்படுவதில் விருப்பம் கொள்ளவில்லை எனவும் அறியப்படுகிறது.
விராட் கோலியை பொறுத்தவரையில் அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாத ஒரு நபராக விராட் கோலி செயல்படுவதாகவும் பிசிசிஐ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தோனி, ரோகித் சர்மா இருவரும் ஒரே நடைமுறையை பின்பற்றுபவர்கள், வீீரர்களுடன் நெருக்கமான உறவை பின்பற்றுபவர்கள், எந்த நேரத்திலும் அவர்களது ஓய்வு அறைக்கு போகலாம், ஆனால் விராட் கோலி களத்துக்கு வெளியில் நட்பு பாராட்டுவர் அல்ல எனும் குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்திருக்கிறது.
ரோகித் சர்மாவை பதவி நீக்க கோரிக்கையை முன்வைத்து இருந்தமையும், அதனால் இந்திய கிரிக்கெட் சபை அதிர்ச்சி அடைந்தமையும் கோலியின் பதவி விலகலுக்கான காரணமாக பேசப்படுகிறது.
இதனுடைய மர்ம விளைவுகளே இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து கோலி விலகுவதற்கான காரணங்கள் எனவும் செய்திகள் குறிப்பிடுகின்றன..