ரோஜர் பெடரர் களத்துக்கு திரும்புவது எப்போது ?

நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மியாமி ஓபனில் இருந்து விலகியுள்ளதாக்க செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து முழு உடற்தகுதி பெற்று மீண்டும் களத்துக்கு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

39 வயதான சுவிஸ் நட்சத்திரம் பெடெரர் , கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனின் அரையிறுதியில் தோல்வியடைந்ததில் இருந்து போட்டிகள் எதிலும் விளையாடாதவர் என்பது கவனிக்கத்தக்கது.

20 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் மியாமி போட்டியைத் தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.