ரோயல்-தோமியன் பெரும்சமர் பிற்போடப்பட்டது…!

இலங்கையின் பழமைமிகு கிரிக்கெட் தொடராகவும், நூற்றாண்டுகள் கடந்து கிரிக்கெட் தொடராகவும் கருதப்படும் ரோயல்-தோமியன் பெரும்சமர் பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித தாமஸ் கல்லூரியின் 4 கிரிக்கெட் வீரர்கள் COVID-19 தொற்றுக்கு இலக்கானதன் பின்னர் 142 வது ரோயல்-தோமியன் பெரும்சமர் ஒத்திவைக்கப்படுவதாக அறியவருகின்றது.

நான்கு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர், மற்ற வீரர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ரோயல்-தோமியன் பெரும்சமர் மே முதல் வாரத்தில் ஹம்பாந்தோட்டையில் விளையாட திட்டமிடப்பட்டது.