ரோஹித்தின் கெத்து ,மேற்கிந்திய தீவுகளை புரட்டிப்போட்ட இந்தியா..!

ரோஹித்தின் கெத்து ,மேற்கிந்திய தீவுகளை புரட்டிப்போட்ட இந்தியா..!

இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டுவென்டி டுவென்டி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 7 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கியது, இதனடிப்படையில் நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டம் துணைநிற்க மேற்கிந்திய தீவுகள் 157 ஓட்டங்களை பெற்றது.

158 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், விராட் கோலி வழமைபோன்று சொதப்பினாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடி காட்ட இந்திய அணி அற்புத வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் இருபத்தொரு வயதான ரவி பிஷ்னோய் அறிமுகமாகி 2 விக்கெட்டுகளை அள்ளினார் .

இது மாத்திரமல்லாமல் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய மதிநுட்பமான தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்டம் மூலம் இந்தியாவிற்கு இன்னும் ஒரு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.

ரோகித் தொடர்ச்சியாய் தலைமைத்துவம் மூலமாக இந்திய ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.