ரோஹித் சர்மா- பிறந்த நாள் சிறப்பு பகிர்வு..!

ஒன்டேல வேர்ல்ட் பெஸ்ட் ஒப்பனிங் பேட்ஸ்மேன்னு பெயர் வாங்கியாச்சு, இரட்டைச் சதம் எல்லாம் அசால்ட்டா, பல கடந்தாச்சு!!!!
டி20-ல சதம் எல்லாம் சாதாரணமாகக் கடந்தாச்சு!!!!!
டி20 லீக்ல பெஸ்ட் கேப்டன்னு பெயர் வாங்கியாச்சு, 8 வருசத்துல 5 கப்னு “கிங் மேக்கர்னு” பெயர் வாங்கியாச்சு!!!!!!
அடுத்து என்ன, சாதிக்க ஏதாவது மிச்சம் இருக்கானு கேக்கும்போதுதான், பல காலமாகக் கைவசம் அகப்படாமல் இருந்த டெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பொஷிசன், ரோஹித்துக்கு வந்து சேர்ந்தது.
“டெஸ்ட்ல மிடில் ஆர்டர்லயே சாதிக்க முடியாத ரோஹித்தா, ஒப்பனிங்ல சாதிக்கப் போறார், அதுவும் நல்லா ஸ்விங் ஆகுற ரெட் பால்ல?”னு கேள்விக்கணைகள் பல எழுந்தன . அவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹோம் டெஸ்ட் சீரிஸ்ல, அதுக்கு பதில் சொன்னார். பேட் மூலமாக, அடியை இறக்கல இடியை இறக்குனார். அப்பவும் கேலிகளும் கேள்விக்கணைகளும் தொடர்ந்துக்கிட்டுதான் இருந்துச்சு.
“இந்தியாவில் ஆடிட்டார், சரி ஹோம் டிராக் புல்லி, எங்க SENA Countriesல போய் ஆடச் சொல்லுங்க, ஆட்டம் கண்டுருவார்”,னு விமர்சனம் வந்த வண்ணம்தான் இருந்தது.
நியிசிலாந்து சீரிஸும் வந்தது, கூடவே காயமும் அழையா விருந்தாளியா வந்தது. ஆஸ்திரேலியா சீரிஸ் வந்தது, அப்பவும் விடாது கருப்பா, அந்த சீரிஸுக்கு முன்னாடியே காயம் வந்து, இரண்டு டெஸ்ட்ல வெளில உக்கார வச்சுடுச்சு.
ஒருவழியா குவாரண்டைன் முடிஞ்சு, இரண்டு டெஸ்ட் ஆட ஸ்டார்ட் பண்ணார். ஆனால், பெருசா கன்வர்ட் பண்ணல, மறுபடியும் விமர்சனங்கள்!!!!
இந்தியா வந்து, இங்கிலாந்து சீரிஸ் ஆடுனார். அப்ப கோலிட்ட ஒரு கேள்வி கேட்கப்பட்டது, “ரோஹித் இன்னும் டீம்ல ஓப்பனரா இருப்பாரா, உங்களோட நிலைப்பாடு என்ன?”னு.
அதுக்குக் கோலி சொன்ன பதில், “ரோஹித் இன்னும் ரொம்ப காலம் ஓப்பனரா, கண்டிப்பாக ஆடுவார்!”னு. ஆனா அந்த முடிவு தப்புனு சொல்ற விதமா, முதல் டெஸ்ட்ல, ரோஹித் நல்லா ஆடாமல் போக, விமர்சனங்கள் தொடர்ந்தன.
ஆஸி, இங்கிலாந்து முதல் டெஸ்ட் ஆடாத போது வந்த மொத்த விமர்சனத்துக்கும், சேத்து வச்சு பதில் கொடுத்தார், இரண்டாவது டெஸ்ட்ல. ரோஹித் கேரியர்ல ஆடப்பட்ட முக்கியமான இன்னிங்க்ஸ்னா, இதைச் சொல்லலாம் .
சென்னை பிட்ச்ல, இங்கிலாந்து பௌலர்கள், ரொம்பவே சோதிக்க, பொறுமையா ஆடி, சதம் அடிச்சு, அந்த மேட்ச்சை மட்டும் காப்பாத்தல, அந்த சீரிஸ் மொமண்டத்தையும், ஒட்டுமொத்தமா இந்தியா பக்கம் திருப்பிவிட்டார். அதற்கடுத்து வந்த பிங்க் பால் டெஸ்ட்ல, இந்தியா சார்பா நல்லா ஆடுன பேட்ஸ்மேன் ரோஹித். அதுக்கடுத்து வந்த டெஸ்ட் மேட்ச்லயும், பொறுமையா ஆடி, 49 ரன் எடுத்திருப்பார்.
ரோஹித் ஒரு டெஸ்ட் ஓப்பனரா, இந்தியக் கண்டிஷன்ஸ்ல பதில் சொல்லிட்டார். அவர் இன்னும் சாதிக்க வேண்டியது, ஒன்னே ஒன்னு மட்டும்தான் – ‘ஓவர்சீஸ் டெஸ்ட் மேட்ச் பெர்ஃபார்மன்ஸ்’. அதையும் சக்சஸ்ஃபுல்லாப் பண்ணிட்டார்னா, ரோகித் கிரிக்கெட் வாழ்க்கை முழுமைடையும். அதை நோக்கித்தான், அவரும் ஓடிட்டு இருக்கார். வேர்ல்ட் டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனல், இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்னு பெரும் சவால்கள் ரோஹித்துக்குக் காத்திட்டு இருக்கு.

பல இன்னல்களையும் கடந்து, பலமான சாதனை படைத்த ரோஹித், இந்த அக்னிச் சோதனையும், வெற்றிக்கரமாக் கடந்து, சரித்திரத்தில் ‘Complete cricketer’ என்ற பெயரை வாங்கிச் செல்ல வாழ்த்துக்கள்

#Ayyappan