லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ஜூலை இறுதியில்-திகதி விபரங்களை வெளியிட்டது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்..!

இலங்கையில் இடம்பெறும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை , மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போட்டிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நாளில் போட்டி திகதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் 30 ம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 22 ம் திகதிவரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 

 

கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் ஒழுங்கமைக்கப்பட்ட LPL போட்டி தொடரில் திசார பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் சாம்பியன் மகுடம் சூடியிருந்தனர்.

சுகாதார ஒழுங்கு முறைகளுக்கமைய இம்முறையும் போட்டிகள் சிறப்பாக இடம்பெறும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

LPL போட்டிகள் இம்முறையும் வெற்றிபெற எமது விளையாட்டு.com குழுமத்தின் நல் வாழ்த்துக்கள்.