இலங்கை A அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன, உயர்கல்விக்காக நியூசிலாந்திற்கு செல்லவிருந்த வளர்ந்து வரும் சுழல் நட்சத்திரம் லசித் எம்புல்தெனியவை கிரிக்கெட் விளையாட பணித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான சிரச தொலைக்காட்சியில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிலேயே அவிஷ்க இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாடசாலை கிரிக்கெட் அணியில் வெற்றிகரமாக செயல்பட்ட பிறகு லசித் எம்புல்தேனிய கொழும்பு ரோயல் கல்லூரியில் இருந்து வெளியேறினார்.
அவரும் அவரது பெற்றோரும் லசித்தை உயர் படிப்புகளுக்காக நியூசிலாந்திற்கு அனுப்ப முடிவு செய்திருந்தனர்,
அங்கு செல்லும் எல்லோரும் நிரந்தரமாக அங்கேயே இருப்பார்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் பிற நடவடிக்கைகள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது எல்லோருக்கும் புரிந்தது.
இந்த சிக்கலுக்குள் மாட்டிய எம்புல்தெனிய தனது தலைமை பயிற்சியாளரான என்னை (அவிஷ்க) அழைத்து ஆலோசனை கேட்டார்,
” எனக்கு நியூசிலாந்தில் பட்டம் பெற சில திட்டங்கள் உள்ளன, ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்கும் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உள்ளது, அதனால் நான் என்ன செய்ய வேண்டும் ?” என்பதே எம்புல்தெனியவின் கேள்வியாகும்.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பட்டம் பெறலாம் , எனவே கிரிக்கெட்டுக்கு உங்கள் இரண்டு வருட காலத்தை ஒதுக்குங்கள் , அது எவ்வாறு செல்கிறது என்பதைப் பாருங்கள், அது நன்றாக நடந்தால் நீங்கள் அதைத் தொடருங்கள்,
அப்படி நன்றாக அமையவில்லை என்றால் 2 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து சென்று உங்கள் பட்டப்படிப்பை தொடரலாம் என்று அவிஷ்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்பின்னர் லசித் இரண்டு ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கான முடிவை எடுத்தார், எனது உதவியுடன் அவர் NCC கழகத்தில் சேர்ந்து முதல் சீசனில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சு பெறுதிகளை நிகழ்த்தினார்.
மேலும் அவர் 23 வயதுக்கு வருவதற்கு முன்பு தேசிய டெஸ்ட் அணியில் அறிமுகம் மேற்கொண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் வெற்றிக்கும் காரணமானார்.
மீதமுள்ளவை எல்லாம் வரலாறு என்று அவிஷ்க கருத்து பகிர்ந்தார்.
ஒரு வீரர் தனது பயிற்சியாளர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றிய கதைதான் இது , இது இலங்கை கிரிக்கெட்டில் இப்போது மிகவும் அரிதானது, ஒரு அணி வீரருக்கு அவர்கள் பெவிலியனில் அமர்ந்திருக்கும் மற்ற வீரர் மீதுகூட நம்பிக்கை இல்லை,
அவிஷ்கா குணவர்தன லசித்துக்கு நம்பிக்கைகூறி தடுத்திருக்க வில்லை என்றால் அவர் வெளியேறியிருப்பார் , நாட்டின் தேசிய அணிக்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளர் கிடைத்திருக்க மாட்டார்.
ஆகவே பயிற்சியாளர்களை அணி வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவிஷ்க அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.