லசித் மாலிங்கவின் மற்றுமொரு சாதனை சமன் செய்யப்பட்டது..!

இலங்கையின் முன்னாள் கேப்டன் லசித் மலிங்காவின் ஐபிஎல் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நேற்று சமன் செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (07) போட்டியில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் சாஹல் 20 விக்கெட்டுகளை கடந்தார்.

யுஸ்வேந்திர சாஹல் 4 அவரை தடவையாக ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை எட்டியுள்ளார்.

இதற்கு முன் 2015, 2016 மற்றும் 2020 சீசன்களில் 20 விக்கெட்டுகளை கடந்திருந்தார்.

 

யுஸ்வேந்திர சாஹல்

ஐபிஎல் சீசன் – விக்கெட்டுகள்

2015 – 23

2016 – 21

2020 – 21

2022 – 22 *

சாஹலுக்கு முன், இலங்கையின் லசித் மலிங்கா நான்கு ஐபிஎல் சீசன்களில் 20 விக்கெட்டுகளை கடந்த ஒரே பந்து வீச்சாளராக இருந்தார்.

2011, 2012, 2013 மற்றும் 2015 ஐபிஎல் சீசன்களில் மலிங்கா 20 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

லசித் மலிங்கா

ஐபிஎல் சீசன் – விக்கெட்டுகள்

2011 – 28

2012 – 22

2013 – 20

2015 – 24

இதன்படி நேற்று லசித் மலிங்கவின் சாதனையை யுஸ்வேந்திர சாஹல் சமன் செய்தார்.