லஹிரு திரிமான்ன & குசல் மெண்டிஸ் – இன்னும் எதற்கு ?

இலங்கை ரசிகராயின் பொறுமையாகப் படியுங்கள்…!
லிஹிரு திரிமான்ன இன்னும் எதற்கு என்று கேட்கும் ரசிகர்கள் இப்போதெல்லாம் இலங்கை கிரிக்கெட்டில் ஏராளம் வந்திருக்கிறார்கள், நான் ஒரு காலத்தில் திரிமான்னவின் மிகப்பெரிய ரசிகன் .
சங்கா, மஹேலவுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தரமான 2 வீரர்களாக வந்திருக்க வேண்டியவர்கள் இந்த திரிமான்னவும், சந்திமாலும்.
இவர்கள் இருவரையும் வரவிடாமல் தடுத்தவர்கள் வேறு யாருமல்ல நாங்கள்தான் , நமது கிரிக்கெட் சபையும்+ தேர்வுக் குழுவும்தான்.
கங்குலி ஒரு தடவை சேவாக்கிடம் சொல்கின்றார்.
“உனக்கு 14 /15 இன்னிங்ஸ் தருகின்றேன் , உன்னை அணியிலிருந்து தூக்க இடமளிக்க மாட்டேன், நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து, நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று” அவரை நம்பிக்கையூட்டி ஆரம்ப வீரராக சந்தர்ப்பம் கொடுக்கின்றார்.
கங்குலி கொடுத்த நம்பிக்கையில் சேவாக் என்னவானார் என்பது அதன்பின்னான வரலாறு.
லஹிரு திரிமான்ன- திறமையை சரியாக கையாள தெரியாத போராட்ட குணமில்லாத சுத்த சூனியம் எனும் அளவுக்கு தன் டெஸ்ட் பெறுதிகளால் வெறுக்கப்படும் ஒரு வகையறாவில் இருப்பவர்.
மிச்சேல் ஸ்ட்ராக், அஷ்வின் போன்றவர்களை விடவும் இவரது டெஸ்ட் துடுப்பாட்ட பெறுதிகள் மிக மட்டமான நிலையிலேயே இருக்கின்றன.
? மிச்சேல் ஸ்ட்ராக்
இன்னிங்ஸ் -89
ஓட்டங்கள்-1575
சந்தித்த பந்துகள் -2319
சராசரி-22.18
அரைசதம்-10
9 இன்னிங்ஸ்களுக்கு ஒரு தடவை மிச்சேல் ஸ்ட்ராக் அரைசதம் கடக்கின்றார்.
32 பந்துகளை ஒரு தடவை Strac ஆட்டம் இழக்கின்றார்.
? ரவிச்சந்திரன் அஷ்வின்
இன்னிங்ஸ் -103
ஓட்டங்கள்-2467
சந்தித்த பந்துகள்-4580
சராசரி-27.71
அரைசதம்-11
சதம்-4
7 இன்னிங்ஸ்களுக்கு ஒரு தடவை அஷ்வின் அரைச்சதம் கடக்கின்றார்.
51 பந்துகளுக்கு ஒரு தடவை அஷ்வின் ஆட்டம் இழக்கின்றார்.
இப்போது நம்மவர் லஹிரு திரிமான்ன பக்கம் வாருங்கள்.
(இன்றைய #ENGvSL காலி போட்டியின் 76 * ஓட்டங்களையும்,சந்தித்த பந்துகளையும் கணக்கில் கொண்ட புள்ளி விபரம்)
டெஸ்ட்-37 *
இன்னிங்ஸ் -72 *
ஓட்டங்கள்-1532 *
சந்தித்த பந்துகள்-3974 *
சராசரி-23.57 *
அரைசதம்-7*
சதம்-1 *
9 இன்னிங்ஸ்களுக்கு ஒரு தடவை திரிமான்ன டெஸ்ட்டில் அரைசதம் கடக்கின்றார்.
60 பந்துகளுக்கு ஒரு தடவை திரிமான்ன தனது விக்கெட்டை பறி கொடுக்கின்றார்.
நான் மேல்சொன்ன இரு புள்ளி விபரங்களையும் அழகாக , கவனமாக பாருங்கள் நமது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் திரிமான்ன இந்தியாவின் அஸ்வின், அவுஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்ட்ராக் ஆகிய இரு பிரதான பந்து வீச்சாளர்களோடே போட்டிபோட்டு தோல்வியை தழுவுகின்ற நிலையில்தான் காணப்படுகின்றார் என்பது பரிதாபத்துக்குரியதுதான்.
ஆனால் தவறு திரிமான்ன பக்கத்தில் இல்லை என்பதற்கும் சில புள்ளி விபரங்களை இணைக்கலாம் என்று நம்புகின்றேன்.
டெஸ்ட்-37
இன்னிங்ஸ் -72
ஓட்டங்கள்-1532
சந்தித்த பந்துகள்-3974
சராசரி-23.57
அரைசதம்-7
சதம்-1
இவ்வளவு மட்டமான பெறுதிகளையும் சேர்த்து கணக்கில் கொள்ளப்படும் FC முதல்தர போட்டிகளில் இவரது சராசரி 40.56
போட்டிகள் -129
இன்னிங்ஸ் -211
ஓட்டங்கள்-7991
சந்தித்த பந்துகள்-16330 +211 * = 16541
(211 * என்பது இந்த #ENGvSL டெஸ்ட்டும் சேர்த்து )
சராசரி-41 +
அரைசதம்-39
சதம்-20
இங்கே கொஞ்சம் வாருங்கள்.
3 .57 இன்னிங்ஸ்களுக்கு ஒரு தடவை திரிமான்ன FC போட்டிகளில் அரைச்சதம் கடக்கின்றார்.
89 பந்துகளுக்கு ஒரு தடவை திரிமான்ன தனது விக்கெட்டை பறி கொடுக்கின்றார்.
முதல்தர போட்டிகளில் கலக்கி, சர்வதேச போட்டிகளில் கோட்டை விடுகின்ற பல வீரர்கள் இருக்கிறார்கள், சிலவேளைகளில் நாம் திரிமான்ன அந்த வகை வீரர் என்றும் அடையாளப்படுத்தலாம்.
ஆனால் இவரை இலங்கை தேர்வுக்குழுவும்,அணித்தலைமையும் எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்றும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
2011 -4 டெஸ்ட் – 177 ஓட்டங்கள்
2012 -3 டெஸ்ட் – 81 ஓட்டங்கள்
2013 -3 டெஸ்ட் – 268 ஓட்டங்கள்
2014 -5 டெஸ்ட் -133 ஓட்டங்கள்
2015 -8 டெஸ்ட் – 310 ஓட்டங்கள்
2016 -3 டெஸ்ட் – 87 ஓட்டங்கள்
2017 -3 டெஸ்ட் – 97 ஓட்டங்கள்
2018 – 0
2019 – 6 டெஸ்ட் – 251 ஓட்டங்கள்
2020 -0
2021 -2* டெஸ்ட் -128* ஓட்டங்கள்
திரிமான்ன தனது 37 டெஸ்ட் போட்டிகளை விளையாட 10 ஆண்டுகள் எடுத்திருக்கின்றார்.
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 9 ஆண்டுகளில் 98 டெஸ்ட் ஆடியிருக்கின்றார் ,இதே ஆண்டிலே அறிமுகமான கோஹ்லி அவுஸ்திரேலியாவில் தவறவிட்ட 3 போட்டிகளை விடுத்தே 87 டெஸ்ட் ஆடியிருக்கின்றார்.
ஒரு வீரரை ஆண்டுக்கு 3/4 போட்டிகளில் ஆட வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் அணிக்கு வெளியில் அனுப்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எப்படி நம்பிக்கை வருவது ?
ஆனால், குசல் மெண்டிஸுக்கு நாங்கள் தொடர்ச்சியான வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதுதான் வரவேற்கத்தக்கது. அணிக்கு தேவையானதும் கூட.
திரிமான்னவைப் போன்று நாம் குசல் மெண்டிசையும் அலைக்கழித்து விடக்கூடாது என்பதுதான் என் இறுதி வாதம்.
குசல் மெண்டிஸ்
வயது 25
47 டெஸ்ட்
3000 + ஓட்டங்கள்
15 டெஸ்ட்டுக்கு ஒருதடவை 1000 என்பது மிகப்பெரிய பாராட்டத்தக்க டெஸ்ட் பெறுதிதான்.
டிராவிட், மஹேல -12 டெஸ்ட் ,சங்கா -11 டெஸ்ட்களுக்கு ஒரு தடவை 1000 பெறும்போது குசல் மெண்டிஸ் தனது 25 வது வயதில் 16 டெஸ்ட்டுக்கு ஒருதடவை 1000 என்பது மிகப்பெரிய விடயம் என்பேன்.
திரிமான்னவைப் போன்றல்லாது குசல் மெண்டிஸ் 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 47 டெஸ்ட் விளையாடி இருக்கின்றார்.சங்ககாரா, மஹேல ஆகியோர் ஆரம்ப காலத்தில் இருந்ததை போன்றல்லாது குசல் மெண்டிஸ் துடுப்பாட்ட பெறுதிகளில் இருக்கிறார் என்பது பெருமைப்படக்கூடியது.
ஆனால் இங்கே தான் விஷயமே இருக்கின்றது.
இந்தியாவின் ரிஷாப் பான்ட்க்கு இளவயதிலேயே அதிகப்படியான வாய்ப்புக்களை கொடுத்து, அவருக்கு தன்னை விட்டால் ஆள் இல்லை என்ற நிலையில் Value புரியாமல் ஆட்டமிழந்து சென்றார்.
ஒரு தடவை என் நிகழ்ச்சியில் சொன்னேன் , கொஞ்சம் Break கொடுத்துப் பாருங்கள், அவர் வேற லெவல் பாண்டாக வருவார் என்று.
பான்ட் 2.0 ஆக வருவதற்கு காரணமே அவருக்கு கொடுத்த Break உம், போட்டிக்கு லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன்,சஹா என்று பலர் இருக்கிறார்கள் என்ற பயத்தை தோற்றுவித்து கொஞ்சம் வெளியில் உட்காரவைத்ததுதான்.
அதே போன்று குசல் மெண்டிசை நாம் திரிமான்ன போன்று ஆக்காமல் பான்ட் போன்று ஒரு சின்ன Break கொடுத்து அணிக்குள் வருவதென்றால் எப்படி போராட வேண்டும் என்று கொஞ்சம் பாடம் புகட்ட வேண்டும்.
Under 19 விளையாடி நேரடியாகவே அணிக்குள் புகுந்து ஆட்சி புரிவதால் அணிக்குள்வர தவம் கிடப்பது என்றால் இவர்களுக்கு (பான்ட் .மெண்டிஸ்) புரியாமல் இருந்தது + இருக்கிறது.
இலங்கையின் அற்புதமான டெஸ்ட் ஆட்டக்காரராக வந்திருக்க வேண்டிய என்னை அதிகம் கவர்ந்த ரோஷன் சில்வாவை ஒருசில போட்டிகளில் 3 ம் இலக்கத்தில் களமிறக்கி, குசல் மெண்டிசை கொஞ்சம் வெளியில் உட்கார வைத்துப் பாருங்கள்.
இரண்டு நல்ல டெஸ்ட் ஆட்டக்காரர்கள் வந்து கிடைப்பார்கள்.
1.குசல் மெண்டிஸ்
2.ரோஷன் சில்வா
இதையெல்லாம் நாங்கள் சொன்னால் நடக்கவா போகிறது, ஆனாலும் சொல்கிறேன்.
ஷான் மஷுட் , மொஹமட் அப்பாஸ் போன்றோரையே வெளியில் வைக்க பாகிஸ்தானாலும் ,அஷ்வின், ஜடேஜாவையே லிமிடெட் ஓவெர்ஸ் கிரிக்கெட்டில் வெளியில் வைத்து சஹால், குல்தீப் ஆகியோரை கொண்டு வந்தது போல ஏன் நாங்கள் செய்யக் கூடாது.
(நாங்கள்-ஸ்ரீலங்கா கிரிக்கெட்)
இப்படி ஒரு சந்தர்ப்பம் நடந்தால் நானும் சங்கா, மஹேல காலத்தில் இலங்கை கிரிக்கெட் போட்டிகளை ரசித்தது போன்று ரசிப்பேன், நீங்களும் எல்லை கடந்து கொண்டாடி மகிழ்வீர்கள்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும், தேர்வுக் குழுவும் திருந்தும்வரை நம் கிரிக்கெட் நமக்கு மீளவும் திருந்தாது.
1.20 நிமிடம் செலவு செய்து இவ்வளவையும் உங்களிடம் சேர்க்கின்றேன்.நேரமெடுத்துப் படித்திருந்தால் அன்பு நன்றிகள்.
Credit-T.Tharaneetharan (FB post)
2021.01.16