லிவிங்ஸ்டன் அடித்த சிக்ஸர், மிரண்டுபோன ஷமி, துடுப்பு மட்டையை சரிபார்த்த ரஷித் கான் -சுவாரஸ்ய சம்பவம் ( வீடியோ )

 

லிவிங்ஸ்டன் அடித்த சிக்ஸர், மிரண்டுபோன ஷமி, துடுப்பு மட்டையை சரிபார்த்த ரஷித் கான் -சுவாரஸ்ய சம்பவம் ( வீடியோ )

நேற்றைய நாளில் இடம்பெற்ற ஐபிஎல் இன் இன்னும் ஒரு போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது, குஜராத் தொடர்ச்சியான ஐபிஎல் போட்டிகளில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வந்தாலும், நேற்றைய நாளில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது தோல்வியைத் தழுவிக் கொண்டது.

குறிப்பாக நேற்று துடுப்பெடுத்தாடிய லியம் லிவிங்ஸ்டன் பஞ்சாப் அணிக்காக பிரம்மாண்டமான ஒரு சிக்சரை பதிவுசெய்தார் .

இந்த 2022 ஐபிஎல் தொடரில் பதிவு செய்யப்பட்ட பிரம்மாண்டமான சிக்ஸ் இது என்பதும் குறிப்பிடத்தக்கது, 117 மீட்டர்களுக்கு இந்த சிக்சர் அடிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் பந்துவீச்சாளர் முகமது ஷமியின் ரியாக்ஷன் தொலைக்காட்சித் திரைகளில் அதிகம் காண்பிக்கப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் ரஷீத் கான் துடுப்பு மட்டையை வாங்கி பரிசோதித்தமையும் நகைப்பிற்குரிய விடயமாகவே பார்க்கப்பட்டது.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இறுதி 5 ஓவர்களில் 27 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது மொகமட் ஷமி வீசிய 16 வது ஓவரில் 28 ஓட்டங்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு ?

 

ரஷீத் கான் நகைச்சுவையாக லிவிங்ஸ்டனின் துடுப்பு மட்டையை (Bat) பரிசோதிக்கிறார் ?