லுகாகு செல்சி அணிக்காக அறிமுகமான போட்டி- அபார வெற்றி செல்சிக்கு..!.

லுகாகு செல்சி அணிக்காக அறிமுகமான போட்டி- அபார வெற்றி செல்சிக்கு..!.

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று (22) இடம்பெற்ற மிக முக்கியமான ஆர்சனல் மற்றும் செல்சி அணிகளுக்கிடையிலான போட்டியில் லுகாகு மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து அபார வெற்றியை செல்சிக்கு பெற்றுக்கொடுத்தனர்.

செல்சி அணிக்கு ஒப்பந்தமாகி இந்த பருவத்தில் தன்னுடைய முதலாவது போட்டியில் விளையாடிய பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரரான லுகாகு  15வது நிமிடத்தில் செல்சிக்கான கோல் எண்ணிக்கையை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் ரேஸி ஜேம்ஸ் இன்னொரு கொலை பெற்றுக்கொள்ள முதல் பாதி ஆட்டத்தை செல்சி அணி 2-0 என்கின்ற அடிப்படையில் முன்னிலையுடன் முடித்தது.

ஆர்சனல் அணி பின்னர் இரண்டாவது பாதியில் கோல் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டாலும்கூட அவை எதுவும் பலனளிக்கவில்லை.

ஆர்சனல் அணி பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி தொடரின் முதல் போட்டியில் அவர்கள் வரலாற்றில் எதுவிதமான கோல்களும் பெறமுடியாத நிலையில் போட்டியை தோல்வியுடன் முடித்துக்கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் நடப்பு சாம்பியன் லீக் வெற்றியாளர்களாக செல்சி அணிக்கு லுகாகுவின் வரவு மிகப்பெரிய பலத்தை கொடுக்க, அவர்கள் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் செல்சி கால்பந்தாட்ட அணியுடன் இணைந்து கொண்டிருக்கும் லுகாகு இன்று பெற்றிருப்பது அவரது 116வது கோலாக அமைந்தது.

எத்தனை கோல் அடித்தாலும் இன்று அடித்த கோல் தன்னுடைய வாழ்நாளின் மிகச்சிறந்த கோல் எனவும் லுகாகு தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.