லேடி ஸ்விம்மிங் சூப்பர் ஸ்டார் “Ledecky”

Swimming
—————–

Swimming competition என்றால் நமக்கு உடனே நினைவில் வரும் பெயர் Michael Phelps என்றால் யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஆம் உண்மை தான் நான்குமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி 23 தங்கம் 3 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களை பெற்றவர் அதனால் உடனே மனதில் ஞாபகத்திற்கு வருவது அவர் பெயர் தான்.

Michael Phelps ஐ போலவே USA நாட்டை சேர்ந்த Katie Genevieve Ledecky என்னும் 24 வயது வீராங்கனை இதுவரை தான் பங்குபற்றிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்க பதக்கமும் 1 வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இம்முறை மூன்றாவது முறையாக பங்குபற்றும் Ledecky 200m, 400m, 800m, 1500m freestyle போட்டிகளில் பங்குபற்றுகிறார்.

Lady swimming superstar “Ledecky” என்றே சொல்ல வேண்டும்.
• 400m freestyle நீச்சல் போட்டியில் 7/08/2016 அன்று 3:56.46 என்னும் நேரத்தில் போட்டி தூரத்தை முடித்து உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

• அதேபோல் 800m freestyle நீச்சல் போட்டியில் 12/08/2016 அன்று 08:04.79 என்னும் நேரத்தில் போட்டி தூரத்தை முடித்து உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

• அதேபோல் 1500m freestyle நீச்சல் போட்டியில் 16/08/2016 அன்று 15:20.48 என்னும் நேரத்தில் போட்டி தூரத்தை முடித்து உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் இல் இதுவரை 15 தங்க பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிட்தக்கதாகும்.

அதே போன்று Pan Pacific Championships இல் இவர் 8 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இம்முறையும் பல சாதனைகள் இவர் மூலமாக நிலை நாட்டபடலாம்.

இன்று(26) 400m freestyle இறுதி போட்டியில் பங்குபற்ற உள்ளார்.

#சந்துரு வரதராசன்