லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்தியர்கள் விபரம்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் 6 வது சதம் அடித்து லோர்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா சார்பில் லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த 10 வது வீரர் என்ற பெருமையும் லோகேஷ் ராகுலுக்கு கிடைத்தது.

லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்தியர்கள் ????

?வினோ மங்கட், 1952
?திலீப் வெங்சர்கார், 1979, 1982, 1986
?ஜி.ஆர்.விஸ்வநாத், 1979
?ரவி சாஸ்திரி, 1990
?முகமது அசாருதீன், 1990
?சவ்ரவ் கங்குலி, 1996
?அஜித் அகர்கர், 2002
?ராகுல் டிராவிட், 2011
?அஜிங்கியா ரஹானே, 2014
?கே.எல் ராகுல், 2021*

#INDvENG

இங்கிலாந்தில் 2 க்கும் மேற்பட்ட சதமடித்த இந்திய தொடக்க வீரர்கள்:

?ராகுல் டிராவிட்
?சுனில் கவாஸ்கர்
?விஜய் மேச்சன்ட்
?ரவி சாஸ்திரி
?கேஎல் ராகுல்

இந்த பட்டியலில் உள்ள ஐந்து பேரும் இரண்டு சதங்கள் அடித்துள்ளனர்.