MCC தலைவரும் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, லோர்ட்ஸ் மைதானத்தில் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னால், லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று புதிய அரங்கம் ஒன்றை திறந்து வைத்தார்.
53 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட காம்ப்டன் மற்றும் எட்ரிச் அரங்கை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
MCC நிறங்களான, கருஞ்சிவப்பு மற்றும் தங்கத்திலான ரிப்பனை வெட்டி, MCC முதல்வர் ஜெரால்ட் கார்பெட், MCC தலைமை நிர்வாகி & செயலாளர் கை லாவெண்டர் ,வடிவமைப்பு திட்டக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சங்கக்காரா அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்துவைத்தார் .
நிகழ்வுக்கு அங்கு வந்தவர்களில் இரண்டு தலைமுறை காம்ப்டன் மற்றும் எட்ரிச் குடும்பங்களும் அடங்கும்.
மறைந்த டெனிஸ் காம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோர் தங்கள் தொழில் வாழ்க்கையின் போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்தனர், மேலும் லார்ட்ஸ் வரலாற்றில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது எனவும் அறியப்படுகிறது.
இந்திய, இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியின்போதே நேற்று இந்த புதிய அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.