ஆசிய கோப்பையில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேலை இழந்தது மற்ற அனைத்து அணிகளுக்கும் நிம்மதி – பதான் கருத்து..’
ஆசிய கோப்பை போட்டி துபாயில் தொடங்க உள்ளது. தற்போது, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
சமீபத்தில், ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், இந்த இருவரும் இல்லாதது மற்ற அணிகளுக்கு நிம்மதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃ்ப்ரிடி உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில், அவர் பங்கேற்க முடியாமை இந்திய அணியினருக்கு மிகப்பெரிய நிம்மதி என்கின்ற கருத்தை வக்கார் யூனிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடியாக இர்பான் பதான் கருத்து அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், வேகப்பந்து வீச்சில் இரண்டு கனரக ஆயுதங்களான பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் இந்தியாவின் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்பது ரசிகர்களுக்கு கவலையானதே.