வங்கதேச அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஆல்பி மோர்கல் நியமனம்

வங்கதேச அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஆல்பி மோர்கல் நியமனம்!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் வங்கதேச கிரிக்கெட் அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், வங்கதேச அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது. அந்தவகையில், முன்னாள் ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்துவருகிறது.
வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இப்போது பவர் ஹிட்டிங் பயிற்சியாளராகவும் தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவனே நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டரான ஆல்பி மோர்கல் தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 58 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர், அணியின் ஃபினிஷராக பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்து 2 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Abdh