வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கிய சிராஜ்- ச்ச்சின் கருத்துக்கு பதில்…!

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசஷிப் பட்டம் வாங்கிய சிராஜ்-   ச்ச்சின் கருத்துக்கு பதில்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்-ஜை புகழ்ந்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.

அதன்படி, “சிராஜ் வெகு விரைவாக அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டு தற்போது சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது உடல்மொழி நல்ல முதிர்ச்சியான வீரரை போன்று வெளிப்பட்டு வருகிறது.

மேலும் அவரது கால்களில் ஸ்ப்ரிங் உள்ளது போன்று அவ்வளவு வேகமாக ஓடிவந்து பந்து வீசுகிறார். நிச்சயம் அவர் இதே போன்று தொடர்ந்து பந்துவீசும் பட்சத்தில் மிகப்பெரிய பவுலராக வருவார்” என்று தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்த வாழ்த்துக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது சிராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி சார். உங்களிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்பது மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. என்னுடைய நாட்டுக்காக நான் எப்பொழுதுமே என்னுடைய பெஸ்ட்டை வழங்க உள்ளேன்” என்று தனது பதிலை அளித்துள்ளார்.

அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 27 வயதான சிராஜ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூலம் அறிமுகமாகி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் அடுத்தடுத்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

#Abdh