வசீம் அக்ரம் மாதிரி இடதுகை வேகப்பந்துவீச்சாளர் வேண்டும்! முதல் வாய்ப்பே இவருக்கு தான்!கம்பீர் திட்டம்
இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங் பந்துவீச்சு என அனைத்தும் நன்றாக இருந்தாலும் நமது அணியில் ஒரு குறை நீண்ட காலமாக இருக்கிறது. எப்படி புஷ்பா திரைப்படத்தில் வில்லன் பகத் ஃபாஸில், ஏதோ ஒன்று குறைகிறது என சொல்வார் அல்லவா? அதுபோல் இந்திய அணியில் பல ஆண்டுகாலமாக ஒரு குறை நீடித்து வருகிறது.
சரியாக எப்பொழுது என்றால் ஜாகீர் கான் ஓய்வு பெற்றதிலிருந்து இந்த பிரச்சனை இருக்கிறது. பும்ரா, முகமது சமி, சிராஜ் போன்ற வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வந்தாலும் ஜாகிர் கானுக்கு மாற்றாக இன்னும் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது ஒரு மைனஸ் தான்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணிக்கு இயற்கையாகவே கூடுதல் சாதகம் இருக்கும். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளில் எப்படியாவது ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்து விடுவார். இடது கை வேகப் பந்து வீச்சாளர்கள் இயற்கையாகவே வலது கை பேட்ஸ்மன்களுக்கு சிக்கல்களை கொடுப்பார்கள்.
ஆனால் இந்திய அணியில் ஜாகிர் கானுக்கு பிறகு பெரிய அளவில் நாம் இடது கை வேகப்பந்துவீச்சாளரை கண்டுபிடித்தது கிடையாது. இதனால் தான் தற்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் பயிற்சியாளர் கம்பீரும் இணைந்து டி20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார்கள்.
அதற்காக இனிவரும் தொடரில் யார் யாரெல்லாம் உள்ளூர் கிரிக்கெட் இடது கை பாஸ்போர்டாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படி இலங்கைக்கு எதிரான தொடரில் கலீல் அகமதுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.தற்போது இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார்.
ஆர்ஸ்தீப் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பயன்படுத்த கம்பீர் முடிவெடுத்து இருக்கிறார். இதனால் கலில் அகமத் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கும் ஆர்ஸ்தீப் டெஸ்ட் போட்டிக்கும் அடுத்த 6 மாதம் விளையாட திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அர்சன் நகவஸ்வல்லா, சேட்டன் சக்கரியா போன்ற வீரர்களும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறார்கள்.