வடக்கில் கோலாகலமாக இடம்பெற்று வரும் Gnam panits Champion Trophy 20 -20 சுற்றுத்தொடரின் 7 ஆம்; 8ஆம்; 9 ஆம் போட்டிகள் நேற்று 04.02.2021 வியாழக்கிழமை சென் பற்றிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் போட்டியாக Jaffna Panters அணி மற்றும் North conqerors அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Panters அணியினர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய North conqerors அணியினர் 19 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 8விக்கட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக அனுரதன் 34 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களையும், கிஷாந்துயன் 23பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் Jaffna Panters அணி சார்பாக உமேஷ் 4 பந்துப்பரிமாற்றங்களில் 08 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் ரொகான் 4 பந்துப்பரிமாற்றங்களில் 20 ஓட்டங்களிற்கு 2 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
111 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna panters அணியினர் 19பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
இதனால் North conqerors அணியினர் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.Jaffna Panters சார்பாக நிரோஜன் 29 பந்துகளை எதிர்கொண்டு 27 ஓட்டங்களையும், நிதர்சன் 24பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். North conqerors அணி சார்பாக நிருசிகன் 3 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும், கபில்ராஜ் 4 பந்துப்பரிமாற்றங்களில் 22 ஓட்டங்களிற்கு 1 விக்கட் இனையும் கைப்பற்றி இருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக North conqerors அணியின் நிருசிகன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியாக அரியாலை கில்லாடிகள் 100 அணி மற்றும் சுண்டிக்குளி Eagles அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணியினர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 9விக்கட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக சுஜாந்தன் 19 பந்துகளை எதிர்கொண்டு 25ஓட்டங்களையும், அகீசன் 39 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சுண்டிக்குளி Eagles அணி சார்பாக பிருந்தாபன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் அபினாஷ் 4 பந்துப்பரிமாற்றங்களில் 22 ஓட்டங்களிற்கு 2 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
114 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி Eagles அணியினர் 19.3 பந்துப்பரிமாற்றங்களில் 7விக்கட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றனர். அவ் அணி சார்பாக அபினாஷ் 18 பந்துகளை எதிர்கொண்டு 36 ஓட்டங்களையும், யதுஷன் 37 பந்துகளை எதிர்கொண்டு 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அரியாலை கில்லாடிகள் 100 அணி சார்பாக சுஜாந்தன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கட்களையும், வியாஸ்காந் 4 பந்துப்பரிமாற்றங்களில் 21 ஓட்டங்களிற்கு 1 விக்கட் இனையும் கைப்பற்றி இருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுண்டிக்குளி Eagles அணியின் அபினாஷ் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவதுபோட்டியாக Nallur Broncos அணி மற்றும் Kokuvil Starsஅணிகள் மோதிக்கொண்டன.நாணய சுழற்சியில் வெற்றி பெற்றNallur Broncos அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்த வகையில்முதலில் துடுப்பெடுத்தாடிய Nallur Broncos அணியினர் 18 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 3 விக்கட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக பானுஜன் 34 பந்துகளை எதிர்கொண்டு 51 ஓட்டங்களையும், அணித்தலைவர் டர்வின் 41 பந்துகளை எதிர்கொண்டு 42 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Kokuvil Stars அணி சார்பாக பிரதீசன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 09 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் சாகித்தியன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 37 ஓட்டங்களிற்கு 1 விக்கட் இனையும் கைப்பற்றி இருந்தனர்.
111 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kokuvil Stars அணியினர் 16.3 பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கட்களையும் இழந்து 65ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.இதனால் Nallur Broncos அணியினர் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர் . Kokuvil Stars அணி சார்பாக ரஜீவ்குமார் 25 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்களையும், பிரதீசன் 11 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Nallur Broncos அணி சார்பாக பிரதீப் 3.3 பந்துப்பரிமாற்றங்களில் 08 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும், சஜீபராஜ் 3.0 பந்துப்பரிமாற்றங்களில் 11 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும் கைப்பற்றி இருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக Nallur Broncos அணியின் பானுஜன் தெரிவு செய்யப்பட்டார்.