வடமாகாணத்திலிருந்து இரு வீரர்கள் இலங்கை U23 தேசியஅணிக்கு தேர்வு..!

வடமாகாணத்திலிருந்து இரு வீரர்கள் இலங்கை U23 தேசியஅணிக்கு தேர்வு..!

2022 இல் நடைபெறவுள்ள 23 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை பூர்வாங்க குழாம் இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூர்வாங்க குழாமில் இணைக்கபட்டுள்ள 23 பேரில் வடமாகாணத்தில் உருத்திரபுரம் கழகத்தில் இருந்து, அதுவும் கிராமப்புற கழகமொன்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கண்ணன் தேனுசன் மற்றும் யுவராசா தனுசன் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 23 பேரில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் இருவரைத்தவிர மற்றைய அனைவரும் தொழில்முறை கழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thenu Thenushan
Uvarasa Thanusan

††***†***************************************

இதே நேரத்தில் 23 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நேற்றைய(25) போட்டியில் இலங்கை மற்றும் சிரிய அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் 5-0 என்ற அடிப்படையில் இலங்கை கால்பந்து அணியை சிரிய கால்பந்து அணி தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தை சேர்ந்த யுவராசா தனுசன் இந்த அணியில் விளையாடியமை கவனிக்கத்தக்கது.