வணிந்து ஹசரங்கவின் எதிர்கால லட்சியங்கள் என்ன தெரியுமா ?
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் சுழல்பந்து வீச்சாளர் ஹசரங்க தன்னுடைய எதிர்கால லட்சியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் யூடியூப் காணொளி நேர்காணல் ஒன்றின்போது ஹசரங்க தன்னுடைய எதிர்கால லட்சியங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெறும் கழக மட்டப் போட்டிகளில் ஒரு கவுண்டி அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்தார், இது மாத்திரமல்லாமல் இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் ஏதாவதொரு அணியில் இணைந்து மாபெரும் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆவலும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் போது மிகச் சிறப்பாக பிரகாசித்ததன் அடிப்படையில் 2 ஐபிஎல் அணிகள் தன்னை அணுகியுள்ளதாகவும் ஹசரங்க தெரிவித்தார்.