வனிது ஹசரங்க இல்லாத இந்திய தொடர்- நம்பிக்கை இழக்கும் இலங்கை ரசிகர்கள்…!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழக்கிறார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வனிது ஹசரங்க கோவிட்-19 இலிருந்து இன்னும் மீளவில்லை மற்றும் சமீபத்திய PCR சோதனையில் நேர்மறை சோதனை (Positive) செய்துள்ளார் என்பதை அறிந்து கொள்கிறது.

ஹசரங்க முன்னதாக ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இலக்காகி ஆஸ்திரேலியா தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து விலக்கப்பட்டார்.

COVID-19 இல் இருந்து மீண்டு வந்தாலும் அவர் இன்னும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

எவ்வாறாயினும், அவரது 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த போதிலும், அவருக்கு இன்னும் கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போது அவைஸ்ரளலிய நாட்டை விட்டு வெளியேற முடியாது.

இதனால் நாளை(24) தொடங்கும் இந்திய தொடரில் அவரால் பங்கேற்க முடியாது என்பது அதிர்ச்சியான தகவலாக அமெந்துள்ளது.

தேசிய அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக வனிது ஹசரங்க இருப்பதால், இந்திய தொடருக்கு முன்னதாக இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.